சிந்தனைச்
சிறகுகள் சிறகடிக்கின்றன
சிந்தனை என்ற
சொல் கேட்டு- என்
சிந்தனைச்
சிறகுகள் சிறகடிக்கின்றன!
வணக்கம் ! என்
வணக்கம் ! என் கண்மணி வணக்கம் !
மலர்ந்தேன் நான்
! கமலமென மலர்ந்தேன் யான் !
சிந்தனைச்
சிறகுகள் தலைப்பினைக் கண்டே !
இக் காவிரி நாடன்
விரிந்தான் - வியந்தான்
சிந்தனைச்
சிறகுகள் முளைக்க -முகிழ்க்க
முகிழ்த்தன
இறக்கைகள் எனும் தமிழார்வம் !
குன்றேறி
சிராப்பள்ளிக் குன்றேறிப்
பறந்து வந்தது
இப்பறவை !
தமிழ்ப் பறவை !
தஞ்சைப் பறவை !
தஞ்சைசார் பறவை !
விஞ்சு புகழ்
கொஞ்சு தமிழ்க் குலவிவர
விண்முட்டும்
பெருங்கோயில் -தஞ்சைப் பெருங்கோயில்
மீதமர்ந்தே
வளர்ந்த இப்பறவை தமிழ்ப் பறவை
சிலிர்த்தெழுந்தே
வந்தது இப்பறவை !
வங்கிப் பணி !
சங்கப்பணி ! தொழிற்சங்கப்பணி - வேறறியா
வெறும்
பற்றாளன் ! தமிழ்ப் பற்றாளன் யான் - அதுவே
தகுதியாயின் எதுகை மோனை சீர் தளை சந்தம் தேடாது
தகுதியாயின் எதுகை மோனை சீர் தளை சந்தம் தேடாது
விரியட்டும்
உங்கள் சிந்தனைச் சிறகுகள் !
வண்ணப் பறவைகள்
சிறகடிக்கின்றன தமிழ்
வண்ணப் பறவைகள்
சிறகடிக்கின்றன - தமிழ்
எண்ணப் பறவைகள்
சிறகடித்து சிந்தனைத் தேன்
வண்ணச் சிதறலாகி
சிந்தனை சிறகடிக்கின்றன !
வண்ணச் சீரடி மண்மகள் அறிந்திலள் தமிழ்
வண்ணச்
சீரடிகொடுத்தவனும் அவனே - தமிழ்
எண்ணச் சீரடி
இளங்கோவடிகள் அவனே
கண்ணகியைக்
கற்புக்கொரு கண்ணகியைக் காட்டியவனே !
சிந்திக்கிறவன்
மனிதன் ! சிந்திக்க வைப்பவனும் அவனே !
சிந்திக்க
மறுப்பவனோ மிருகம் ! நிந்திப்பவனும் அவனே !
சிந்திப்பவனை
நிந்திப்பவனும் அவனே !
ஆயின் மிருகமன்றோ
அவனே !
சிந்தனைக்கு கால
நேரமுண்டோ ? எல்லையுமுண்டோ ?
எழிலார்
சிந்தனைக்கு ! மொழியில்லை !
பழியும் உண்டே!
சிந்தனைக்கு உண்டு அவன் கால
நிந்தனை !
காலம் கடந்த வந்தனை உண்டு சிந்தனைக்கு!
இறையானான்
மண்தனுக்கு இரையான பின்தானே !
கல்லால்
அடித்தான் அவனை - கலிலியோ கலிலி
செத்தும்
ஒழிந்தான் அவன் கல்லால் அடிபட்டு
கொடும் நஞ்சன்றோ
பரிசு - ஏதென்சு சாக்ரடீசுக்கு
சொல்லால்
அடித்தான் அவனை - ஆர்கிமிடீசு அவனே !
ஒழித்தார்கள்
இவர்களை ! ஒழிந்தார்கள் இவர்களும் இவன்களும்
ஆனாலோ அவன் கண்டு
பிடிப்புகளும் சொல்லிட்ட கண்டிட்ட
தத்துவங்களும்
ஒழியவில்லை ! அழியவில்லை !
சாகாவரம் பெற்ற இவர்களோ நிலத்து வாழ்கிறார்கள் !
இறைவனையும்
மறுத்தான் ! இறைவனையே
மறுத்தான் இங்கர்சால்
- மறுத்தான்
இங்கு ஒரு சால் !
சால் நிறை பெரியார்
இங்குமொரு
பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியார் !
புதுமைப் பெண்
கண்ட பாரதியோ கூறுகிறான்! கூவுகிறான்!
நாணும் அச்சமும்
நாய்கட்கே வேண்டுமாம்
வற்புறுத்திப்
பெண்ணைக் கட்டிக்கொடுக்கும்
வழக்கத்தைத்
தள்ளி மிதித்திடுவோம் !
விடுதலைக் கும்மி
அடிக்கிறான் ! பெண்
விடுதலைக்
கும்மி அடிக்கிறான் ! கூறியவன்
பாட்டுக்கொரு புலவன் பாரதி ! கூவியவன்
புரட்சிக்கவியவன் பாரதி ! சிந்தனைச்
சிறகுகள் முகிழ்த்த
சிந்தனைக்
கவியவன் ! கவிச் சித்தனும் அவனே !
வாழ்கிறார்கள் !
இவர்கள் வாழ்கிறார்கள் !
கொள்கைகளில் !
இவர்தம் கொள்கைகளில் !
கொடியவர்கள்
அவர்கள் ! கல்லால் அடித்தக் கொடியவர்கள் !
சொல்லால் அடித்த
கொடியவர்கள் !
நாமோ
கல்லறைக்கு வணக்கம் சொன்னோம் !
அவர்தம்
சிந்தனைக்கு மலர் வளையம் கண்டோம் !
நானோ
விளிக்கிறேன்! சிந்தனைச் சிறகுகள்
விரித்த உங்களை !
அழைக்கிறேன் !
சிந்தனைப் பறவைகளே !
வாழும்போதோ
கல்லடி ! சொல்லடி !
பாராட்டும்
சீராட்டும் வாழ்வு முடிந்த பின்போ !
வேண்டாம் இந்தப்
பொய் முகம் ! வேண்டாம்
பொய் நிறை நடப்பு
! நடிப்போ நடிப்பு !
எந்தனைக் கேளிர்
! எந்தனைக் கேளிர் !
வருகவென
அழைக்கின்றேன் ! வாருங்கள்!
தருகவென
அழைக்கின்றேன் தாருங்கள் !
தருவோம்
மலர்ச்செண்டை வாழும்போதே !
கூறுங்கள்
தெய்வமென்றே ! சிந்தனையே தெய்வமென்றே !
காணமுடியாது !
காணமுடியாது ! தெய்வத்தினையே !
சிந்தனையைக்
காணமுடியாது கண்ணால் !
மனக்கண்ணால்
காணமுடியும் தெய்வத்தினையே !
உணரமுடியும்
அதனையே ! உணரமுடியும் சிந்தனையையே !
மனக்கண்ணால்
உணரமுடியும் ! ஒன்றன்றோ இரண்டும் !
வேண்டாம் சிந்தனை
! வேண்டாம் சிந்தனை !
வேண்டுவதோ
முயற்சி ! வேண்டுவது எண்ணம் !
சிந்திக்கவென்றே
! பிறக்கின்றான் சிந்தனையாளனும் !
முகிழ்க்கின்றன
சிந்தனைச் சிறகுகள் !
மடை திறந்த
வெள்ளமன்றோ ! சிந்தனை மடை திறந்த வெள்ளமன்றோ !
மடைதிறக்க
வேண்டாவோ ! மனமெனும் மடைதிறக்க வேண்டாமோ !
சிந்தனை
வெள்ளமெனப் பாய சிந்தனை வெள்ளமெனப் பாயும் !
சிந்தனைச்
சிறகுகளே ! சிந்தனைச் சிறகுகளே !